ஆர்.கே. பேட்டை: காண்டாபுரத்தில் பீரோவை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை காண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் 42. இன்று காலை வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து, ஒன்றரை சவரன் தங்கநகை, கால்கிலோ வெள்ளி போன்ற பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.