பொன்னேரி: அத்திப்பட்டு புதுநகரில்
பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வைரல்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் இன்று காலை பெட்ரோல் நிரப்பப்படாத டேங்கர் லாரி அப்பகுதியில் வெல்டிங் கடையில் டேங்க் பழுது பார்க்கப்பட்டது,அப்போது எதிர்பாராத விதமாக திடீரென டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்ட போது லாரி வெடித்து சிதறியதில் ஏற்பட்ட அதிர்வில் அருகில் இருந்த 2 கடைகள் சேதமடைந்தன.இதனால் அருகில் இருந்தவர்கள் மற்றும் சாலையில் பயணித்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.4 பேர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்