சாத்தான்குளம்: புளியடி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி பட்டம் ஏந்தி ஊர்வலமாக வந்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி மற்றும் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.