மண்ணச்சநல்லூர்: தாளக்குடி அருகே நடந்து சென்றவர் மீது வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி
திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவரது தாத்தா நாகராஜ் என்பவர் தாளக்குடி பேருந்து நிறுத்தம் அருகே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே முகமது ஆரிப் என்பவர் வேகமாக ஓட்டி வந்த வாகனம் இவரின் மீது மோதியது இதில் காயமடைந்த நாகராஜ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்