திண்டுக்கல் கிழக்கு: பாடத்திட்டத்துடன் சேர்த்து வாழ்வியல் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் தாமரைப்பாடி கல்லூரி விழாவில் ஆட்சியர் பேச்சு
தாமரைப்பாடி பண்ணை பார்மசி கல்லூரியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது மாதா கெபியினை மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால் சாமி அர்ச்சித்து திறந்து வைத்தார். தொடர்ந்து நிறுவனர் பி வி ஆர் மாரிமுத்து அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது பண்ணை பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் 100 மாணவ மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார்