திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, பச்சைமலையான் கோட்டை அருகே உள்ள உத்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஜோதி என்பவர் தனது கணவருடன் நாமம் போட்டும், மனுக்களை மாலையாக அணிந்தும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருகை புரிந்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.