திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38வது நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமையிலும் மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையிலும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.