கொடைக்கானல்: அஞ்சுவீடு அருவி நீரில் மூழ்கி வாலிபர் பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில்குமார் - கலா தம்பதியினரின் மகன் நந்தகுமார்(21) என்பவர் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்புத்துறையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.