திண்டுக்கல் கிழக்கு: வத்தலகுண்டு பைபாஸ் சர்வீஸ் சாலையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது செய்து சிறையில் அடைப்பு
திண்டுக்கல்,R.M. காலனியை சேர்ந்த முருகேசன் மகன் கருப்பையா இவர் வத்தலகுண்டு பைபாஸ் சர்வீஸ் சாலையில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார் இவரது ஒர்க் ஷாப்பில் தாண்டிக்குடி பெரும்பாறையை சேர்ந்த சின்னகாளை மகன் பாண்டியராஜன் என்பவர் வேலை செய்து வந்தார். சித்தரேவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சூரிய பிரகாஷ்(34) என்பவர் குடிபோதையில் பாண்டியராஜனிடம் ஒர்க் ஷாப்-ன் பைக்கை சிறிது நேரம் வேண்டும் என்று கேட்டுள்ளார் அதற்கு பாண்டியராஜன் மறுத்ததை தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.