ஆவடி: கொரட்டூரில் வீடு புகுந்து செயின் பறிக்க முயற்சி செய்த நபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொரட்டூர் கிழக்கு நிழல் சாலை பகுதியில் நேற்று மாலை சுதாவின் வீட்டின் கதவை ஒருவர் தட்டியதால் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது. ஒருவர் தான் வைத்திருந்த துணியால் முகத்தை மூடி பின் கத்தியை காட்டி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொடுக்கும்படி மிரட்டி உள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், அவர் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பதும் ஆன்லைன் டிரேடிங் பணம் இழந்ததால் பணத்தை அடைக்க திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது