குன்றத்தூர்: கோவூர் ஊராட்சியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை குறு சிறு &  நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கோவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்" முகாமினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.எம். ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ரா செந்தில் ஆகியோர் உள்ளனர்.