கள்ளிமந்தயம் தும்பச்சிபாளையம் கருப்புச்சாமி ராஜலட்சுமியுடன் தோட்டத்து வீட்டில் கடந்த 23ம் தேதி முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் தம்பதியினரை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளையும், ரூ.38 ஆயிரத்தையும் கொள்ளையடித்து செல்போன்களையும் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர் இதுகுறித்து கள்ளிமந்தயம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கேரளா எர்ணாகுளம், இம்ரான்கான் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்