நத்தம்: சாணார்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி
சாணார்பட்டி, ரெட்டியபட்டி, சிலுவத்தூர், விராலிப்பட்டி, கொசவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது தற்பொழுது குளிர்ந்த காற்றுடன் குளிர்ச்சியான இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.