வேடசந்தூர்: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த தளிப்பட்டி, ஒத்தப்பட்டி பகுதியினருக்கு திமுக அதிமுகவினர் நேரில் அஞ்சலி
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த வேடசந்தூர் அருகே உள்ள தனிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ் மற்றும் ஒத்தப்படியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அறிந்த வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன் மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் பரமசிவம், தென்னம்பட்டி பழனிச்சாமி ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்