திருப்புவனம்: மடப்புரத்தில் காவல்துறை அத்துமீறல்: OPS கடும் கண்டனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், காவல்துறை சட்டத்தை மீறி செயல்பட்டதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதை அவர் கடுமையாக கண்டித்துள்ளார். அதிமுக மீட்பு குழுவின் சார்பில் அவர் கூறியதாவது, “இந்த சம்பவம் மிகுந்த அத்துமீறலாகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறை தட்டி கேட்காததால்தான், தவறு செய்பவர்களுக்கு தைரியம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை மாற வேண்டும்.