வாலாஜா: வாலாஜாபேட்டை AAA கல்லூரியில் 72 கோடி 16 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி கடன் உதவி வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் இந்த நிகழ்வில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு 642 மகளிர் உதவி குழுக்களுக்கு 72 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்