அம்பத்தூர்: அம்பத்தூர் வள்ளலார் நகர் பகுதியில் பங்களா வீட்டில் புகுந்து மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
அம்பத்தூர் அருகே வள்ளலார்நகர் பகுதியில் பங்களா வீட்டில் கொள்ளையடிக்க பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த மூதாட்டி வக்சலாவை(65) தாக்கி கத்தி முனையில் 4 சவரன் தங்க செயினை பறித்து தப்பி ஓடியுள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.