துறையூர்: துறையூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இப்பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18 வார்டு தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையிலான 300க்கும் மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்கள் துறையூர் நகராட்சியை முற்றுகையிட்டனர்.