தமிழர்களின் பாரம்பரியமாக தங்களது வீடுகளில் ஆடு மாடு, கோழி, சேவல் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடை வளர்ப்பில் ஒன்றான கிளி மூக்கு விசிறிவால் சேவல் இனம். அழிந்து போவதை தடுப்பதற்காக திண்டுக்கல்லில் அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் குழு வருடம் தோறும் கிளிமூக்கு, மற்றும் விசிறிவால் சேவல் கண்காட்சி நடத்தப்பட்ட வருகிறது. உயரம், மூக்கு , வால், கொண்டை, கம்பீரம் ஆகியவற்றை வைத்து தேர்வு செய்து சிறந்த சேவல்களுக்கு எல் இ டி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பரிசாக வழங்கப்பட்டது