வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி கருவை கலைப்பதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டதாகவும் அதனால் மாணவிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக 24 ஆம் தேதி சேர்ந்ததாகவும் சிகிச்சை பலனின்றி 28ஆம் தேதி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் குறித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.