தமிழகம் முழுவதும் நேற்று கார்த்திகை தீபம் சிவன் கோவில் மற்றும் முருகன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்ணு கார்த்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள சுவர்களில் 10,000 அகல் விளக்குகளில் திரி மற்றும் எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.