பல்லடம்: சின்னா நகர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் சின்னாநகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி பொது மக்களுக்கு கடந்த சில நாட்களாகவே குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் சரியாக வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் இன்று இரவு சின்னா நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரியும், தரமான குடிநீர் வழங்க கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற