நாகை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரஅண்ணாதுரை தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட முதலியப்பன்கண்டி, குண்டுவரான்வெளி உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆட்சியர் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.