திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் பட்டி, வக்கம் பட்டி, பஞ்சம்பட்டி இந்து கிராமங்களில் பொது மக்களையும் கலாச்சார வழிபாட்டு முறையை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாநிலத் தொண்டர் அணி தலைவர் திண்டுக்கல் மோகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் சீனிவாசன், முழு நேர ஊழியர் ராமச்சந்திரன், ஜெகதீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.