திருவிடைமருதூர்: பூட்டிய வீட்டுக்குள் இருந்து எழுந்த துர்நாற்றம்... அக்கா தம்பியின் மர்ம மரணம்: கதிராமங்கலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் பூட்டிய வீட்டிற்குள் முதியோர்களான அக்கா தம்பி இருவரும் மர்மமாக இறந்து கிடந்தனர். அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது உடல் நலக்குறைவால் இறந்தனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.