சாத்தான்குளம்: புனித மரியாளின் ஆலய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித மரியாளின் மாசற்ற திரு இருதய ஆலய திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. திருவிழா பத்தாம் நாளை முன்னிட்டு சிறப்பு தேர் பவனி நடந்தது. இதில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மும்மதத்தினர் பங்கேற்று உப்பு மிளகு காணிக்கை செலுத்தி வணங்கினர். இந்த தேரானது ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.