பேரூர்: பேரூர் படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.