வேடசந்தூர் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஜி நடுப்பட்டி ஊராட்சி நடுப்பட்டியில் பெண்களுக்கான கும்மி நடனப் பயிற்சி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. பயிற்சியாளர் கே.எல்லைபட்டியை சேர்ந்த முத்துவடிவேல் பயிற்சி அளித்த நிலையில் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், பெண் விவசாயிகள், பெண் தொழிலாளர்கள், பெண் தொழிலதிபர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கும்மி நடன பயிற்சியை மேற்கொண்டனர்.