திண்டுக்கல் கிழக்கு: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்வு
நவராத்திரி பண்டிகை மற்றும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ 1500 ரூபாய் முல்லைப் பூ 600 ரூபாய் கனகாம்பரம் 600 ரூபாய்க்கும் காக்கரட்டான் 550 ரூபாய்க்கும் ஜாதிப்பூ 500 ரூபாய் அரளி 600 ரூபாய்க்கும் செவ்வந்தி 250 ரூபாய் ரோஜா 250 ரூபாய் சம்பங்கி 200 ரூபாய் விரிச்சி பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது பூக்கள் வரத்து போதுமான அளவில் உள்ளதால் விலை இந்த வருடம் அதிகப்படியாக உயரவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்