சோளிங்கர்: சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை இடிக்க கோரி சமூக ஆர்வலர் புகார்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலர் ஏகாம்பரம் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சமூக ஆர்வலர் சின்னபையன் என்பவர் புகார் மனு வழங்கினார். மனுவில் சோளிங்கர் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் அசோகன் ஆகியோர் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அதில் விடுதி கட்டி உள்ளதாகவும் உயர்நீதிமன்றம் அதனை இடிக்க உத்தரவிட்டும் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து புகார் மனு வழங்கினார்.