முதுகுளத்தூர்: அறுந்து கிடந்த மின் கம்பியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி, மகன் பள்ளி மாணவன் படுகாயம் உடலை வாங்க மறுத்து GH முன்பு பஸ் மறியல்
மேலத்தூவல் -கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல்(50) என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்ததில் சித்திரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இறந்த சித்திரவேல் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் நிதியும், இறந்தவரின் மனைவிக்கு அரசாங்க வேலையும், இதற்கு காரணமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி மற்றும் உறவினர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முன்பு பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்