திருவொற்றியூர்: திருவொற்றியூர் தேரடி பகுதியில் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு 117 பேர்களுக்கு கிழக்குப் பகுதி செயலாளர் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது
திருவொற்றியூர் திமுக கிழக்குப் பகுதி சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் 1117 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மண்டல குழு தலைவரும் கிழக்குப் பகுதி செயலாளர் தனியரசு செய்திருந்தார் நிகழ்வில் மகளிர் அணியினர் மற்றும் திமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.