அகஸ்தீஸ்வரம்: தடகளப் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம்—நாகர்கோவில் அலுவலகத்தில் வரவழைத்து பாராட்டிய எஸ் பி
அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான காவல்துறை மட்டும் தீயணைப்பு துறைகளுக்கான தடகளப் போட்டியில் குமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலைய பெண் தலைமை காவலர் கிருஷ்ணரேகா 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார் இந்த நிலையில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் தலைமைப் பெண் காவலரை வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வாழ்த்து தெரிவித்தார்