பொன்னேரி: போந்தவாக்கம் கண்டிகையில்
கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து பலி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த போந்தவாக்கம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ருத்திரன் (58). கடந்த 12ஆம் தேதி இரவு வழக்கம் போல கீரை வகைகளை பறித்து சந்தைக்கு அனுப்புவதற்காக தமது விளை நிலத்திற்கு சென்றார். கீரை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்