வாலாஜா: நரசிங்கபுரம் கிராமத்தில் கோகுலாஷ்டமி முன்னிட்டு உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் கோகுலாஷ்டமி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற உரியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய போட்டிகளை அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.