லால்குடி: லால்குடி அருகே கதண்டு கடித்து 20 பேர் லால்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெடுஞ்சாலைக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவின் நடைப்பெற்று வருகிறது . இதற்க்காக கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பால்குடம் எடுத்து வருகையில் கிராமத்தினர் பலத்த சத்தம் உடைய வெடிகளை வெடிவைத்துள்ளனர் . அப்பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கதண்டு மீது பட்டு கதண்டு கடித்ததில் இருவதற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்