கோவை வடக்கு: கோவையில் பட்டப்பகலில் வழிப்பறி முயற்சி: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!
கோவை வெரைட்டி ஹால் சாலையில் மது போதையில் தூங்கிய வட மாநில வாலிபரிடம் செல்போன் மற்றும் பணத்தைப் பறிக்க முயன்ற 3 பேர் கொண்ட கும்பலின் வீடியோ வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.