வேடசந்தூர்: பேரூராட்சி அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேடசந்தூர் பேரூராட்சி முழுவதும் தடையின்றி காவிரி குடிநீர் வழங்கிடவும், சாக்கடை, தெருவிளக்கு, சாலை வசதிகளை நிறைவேற்றிடவும், பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இறைச்சிக் கழிவுகளை குடகனாற்றில் கொட்டுவதை தடுத்திடவும், சாலைகளில் ஆடு, மாடு, நாய்கள் திரிவதை தடுக்க நடவடிக்கை எடுத்திடவும், பேரூராட்சி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் பொதுக்கழிப்பறை அமைத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.