திண்டுக்கல் கிழக்கு: சிலுவத்தூரில் பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
சாணார்பட்டி அருகே சிலுவத்தூரில் உள்ள பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. சனிக்கிழமை தீர்த்த குடங்கள் அழைத்தல், முதல் கால யாகசாலையில் பூஜையைத் தொடர்ந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தக் குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமானத்தை சென்றடைந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் விமானத்தில் ஊற்றப்பட்டது.கோயிலை சுற்றி நின்ற பக்தர்கள் குலவையிட்டு சாமி தரிசனம்