ஒட்டன்சத்திரம்: கோட்டைவெளி ஆதிவாசி காலனியில் புகுந்து மூன்று கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோட்டைவெளி ஆதிவாசி காலனி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன் கோழிகளை வளர்த்து வருகிறார். இரவு வந்த மலைப்பாம்பு அவர் வீட்டில் அடைத்து வைத்திருந்த மூன்று கோழிகளை விழுங்கி விட்டு நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதனைப் பார்த்த முருகன் மற்றும் அப்பகுதியினர் பாம்பை பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.