கோவை தெற்கு: ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிதி உதவி வழங்கிட வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அண்மையில் ஆந்திர அரசாங்கம் நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோ டிரைவர் சேவை என்ற திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் நிலையில் தமிழக அரசும் அதே போன்ற நிதி உதவியை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.