அரியலூர்: பேருந்து நிலையத்தில் சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி - மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு
சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி அரியலூர் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குகளில் சமரசம் செய்து கொண்டால், வழக்காடிகளுக்கு வெற்றி, தோல்வி என்பதே இல்லை என்றும், நேரம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அரியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி ஊர்வலமாக வந்து அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேரணி முடிவடைந்தது.