கொடைக்கானல்: மலேசியாவில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா வந்த பயணிகள் வாகனம் 300 அடி பள்ளத்தில் இறங்கி விபத்து
மலேசியாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 14 நபர்கள் வாடகைக்கு டெம்போ வாகனத்தை எடுத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். கொடைக்கானல் முதல் பழனி மலைச்சாலை மிகவும் பள்ளத்தாக்கான சாலையாகும். மேலும் பெருமாள் மலை பகுதியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளை பாறை பகுதியில் குறுகிய சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பிரேக் பிடிக்காத காரணத்தினால் 300 அடி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது