வேடசந்தூர்: ஆத்துமேட்டில் அறிஞர் அண்ணா அவர்களின் உருவப்படத்திற்கு திமுகவின் சார்பில் மரியாதை
வேடசந்தூர் ஆத்துமேட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மேடையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.