தேவகோட்டை: தேவகோட்டை நகர சிவன் கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இன்று ஆணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு பல்வேறு மஞ்சள், சந்தனம்,பால், தயிர், தேன்,பன்னீர் நெய் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அலங்கரிப்பட்ட உற்சவர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது