கயத்தாறு: நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம்
கயத்தாறு அருகே உள்ள அரசன்குளம் கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வருபவர்கள் விவசாயி கொம்பையா, அவரது மனைவி இசக்கியம்மாள். இவர்கள் இருவரும் கயத்தாறில் இருந்து அரசன்குளம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் நான்கு வழிச் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.