திருப்போரூர்: சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு கோவளம் கடற்கரையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்
சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சியில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம், ஏற்பாட்டில் நடைபெற்றது, இதில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரையை தூய்மைப்படுத்தினர்,