கடலூர்: மஞ்சக்குப்பம் பெண்ணை ஆற்றுப்பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவரை கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர்
கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் தடுப்பு சுவரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்த செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.