தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளவரசன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர் உறுப்பினர் ராஜா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்துதல்,மாணவர் இடைநிற்றலை தவிர்த்தல்,சமூக விரோதி நடமாட்டத்தை தடுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் திலீப்குமார் நன்றியுரை கூறினார்