திண்டுக்கல் மேற்கு: கன்னிவாடி அருகே வருவாய் துறை மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் செம்பட்டி ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல்
தர்மத்துப்பட்டி ஊராட்சி புதூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான மக்களின் பொது பயன்பாட்டிற்கு உள்ள இடத்தை இதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் ஜெகன் ராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுவதற்கு தனது பணியை தொடங்கியதாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கதா காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு